கல்வித் தொலைக்காட்சி பாட அட்டவணையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் -தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0 3836
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை  மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் பற்றிய விழிப்புணர்வையும், புரிதலையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால், கல்வித்தொலைக்காட்சி வாயிலாக கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments