மறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல்..!

0 3177
நடிகர் விவேக் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

டிகர் விவேக் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரபல திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக்கின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

நகைச்சுவையோடு மட்டும் அல்லாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விவேக்கின் இறப்பு, திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என அப்பாவு கூறினார்.

இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. எழுத்தாளர் கி. ராஜநாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments