இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மீண்டும் பாதிப்பு

0 4041
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மீண்டும் பாதிப்பு

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

சவுதாம்டன் மைதானத்தில் நடந்து வரும் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில், 4-வது நாளான நேற்று மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டு இருப்பது வெற்றி யாருக்கு என்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments