குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிகாட்டல்... இணையவழிக் கற்றலுக்கு நெறிமுறைகள்..! - பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

0 3753

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வையிடவும், அதுசார்ந்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யவும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உருவாக்கப்படும்.

 மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு தங்களுக்கு வரும் எந்தப் புகாரையும் மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க வேண்டும். இணையவழிக் கற்றல் - கற்பித்தலின்போது ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணியமாக உடை அணிய வேண்டும்.

இணைய வழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதுடன், பதிவுகளை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் புகார்கள் கருத்துக்கள் தெரிவிக்கப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் வைக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments