நகையை ஒளித்து வைத்துவிட்டு, திருட்டுப் போனதாக நாடகமாடிய மூதாட்டி... எச்சரித்து அனுப்பிய போலீசார்

0 3597

மதுரையில் கணவனை இழந்து வறுமையில் வாடும் மகளுக்காக 26 சவரன் நகை கொள்ளை போய் விட்டதாக நாடகமாடிய 80 வயது மூதாட்டியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அண்ணாநகர்  LIC காலனியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற அந்த மூதாட்டிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 26 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர் என போலீசில் புகாரளித்தார் மூதாட்டி.

தீவிர விசாரணையில்  மூதாட்டி நாடகமாடியது தெரியவந்தது. மூதாட்டிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், மகளின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோய் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்துள்ளார். தன்னிடம் இருக்கும் 26 சவரன் நகையை மகளுக்கு கொடுக்க எண்ணினாலும் அதற்கு மகனும் மருமகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் தனது நகையை வீட்டில் உள்ள அரிசிப் பானையில் ஒளித்து வைத்துவிட்டு, திருட்டுப் போனதாக மூதாட்டி நாடகமாடியது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments