வாகன சோதனையில் தகராறில் இளைஞரை தாக்கியதாக புகார்... போலீஸ்காரர் தரப்பில் விளக்கம்

0 3425

சென்னையில் கிண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியை தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், தன்னை தாக்கிய வாகன ஓட்டியை தடுத்து கீழே தள்ளியதால் காயம் ஏற்பட்டதாக போலீஸ்காரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் இளைஞரை தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று வைரலானது.

இது குறித்து விளக்கமளித்துள்ள கிண்டி போக்குவரத்து ஆய்வாளர், குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்கள் மீது, சோதனையில் ஈடுபட்டிருந்த செல்வராஜ் என்ற காவலர் வழக்குப்பதிவு செய்ய முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவலரின் சட்டையைப் பிடித்து இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பதிலுக்கு, காவலரும் இளைஞரைப் பிடித்து கீழே தள்ளியதால் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments