24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று

0 2862

கடந்த 88 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கையாக, கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 256 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.

இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்து 422 ஆக குறைந்துள்ளது. 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சுமார் 7 லட்சம் பேர் தொற்று பாதித்து சிகிச்சையிலும், வீட்டுத்தனிமையிலும் உள்ளனர். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 28 கோடியே 36 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments