யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் துருக்கி அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

0 2680
யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் துருக்கி அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து.

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன 

ரோம் மைதானத்தில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி, வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி வீரர்கள் எதிரணியைத் திணறடித்தனர். 39-வது நிமிடத்தில் matteo pessina கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பதில் கோல் அடிக்க வேல்ஸ் அணி வீரர்கள் கடைசி வரை போராடியும், அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்று போனது. இறுதியில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.

அஜர்பைஜானின் பாகு (Baku) மைதானத்தில் நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் துருக்கி அணியை 3-க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்து அணி வென்றது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலே சுவிஸ் வீரர் haris seferovic கோல் அடித்தார்.

26 மற்றும் 68-வது நிமிடங்களில் சுவிஸ் வீரர் xherdan shaqiri 2 கோல்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசி வரை போராடிய துருக்கி அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. இதன் மூலம் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments