நடிகை அளித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைப்பு

0 3744
நடிகை அளித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைப்பு

பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக நடிகை ஒருவர் மணிகண்டன்மீது புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், மணிகண்டன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் பெங்களூருவில் மறைந்திருந்த அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments