சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது - கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை

0 2662
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது - கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை

சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கி மலை வரையும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுகிறது.

இந்த வழித்தடங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் எனவும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments