சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் - 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி

0 5079
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் - 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி

மிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.

தமிழக அரசு அறிவிப்பின் படி, மூன்றாம் வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இம்மாவட்டங்களிடையே பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் குளிர் வசதி இல்லாமல், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இன்று காலை முதல் இயங்கத் தொடங்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments