1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்று 50ஆண்டு பெற்றதன் நினைவாக காஷ்மீருக்கு வந்த வெற்றிச் சுடர்

0 2328
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்று 50ஆண்டு பெற்றதன் நினைவாக காஷ்மீருக்கு வந்த வெற்றிச் சுடர்

1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றிபெற்றதன் நினைவாகக் கொண்டு செல்லப்பட்ட வெற்றிச் சுடர் காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஏற்றி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதன் ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாகக் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குக் கொண்டு செல்லப்பட்ட வெற்றிச் சுடர் முன்னாள் ராணுவத்தினர், ராணுவ வீரர்கள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போர் நினைவிடத்தில் அந்த வெற்றிச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. போரில் காயமடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவத்தினர் சிகிச்சை அளித்ததை முன்னாள் ராணுவத்தினர் நினைவுகூர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments