சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு அதிகாரமளிக்கவே புதிய டிஜிட்டல் விதிகள் : ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்தியா விளக்கம்

0 2486
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு அதிகாரமளிக்கவே புதிய டிஜிட்டல் விதிகள் : ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்தியா விளக்கம்

மூக ஊடகங்களை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் நோக்கில் மட்டுமே புதிய டிஜிட்டல்  விதிகளை அமல்படுத்தியதாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகள் குறித்து கவுன்சிலின் சிறப்பு நடவடிக்கை பிரிவு கேட்ட கேள்விகளுக்கு ஐ.நா.இந்திய நிரந்தர தூதரகம் அளித்த பதிலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அவமதிப்புக்கு ஆளாகும்  நபர்களின்  குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க ஒரு அமைப்பு இருப்பது அவசியம். எனவே, இந்த விவகாரங்களில் தொடர்புடைய பலரது கருத்துக்களை கேட்ட பிறகே புதிய டிஜிட்டல் விதிகள் உருவாக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சமூகதளங்கள் வாயிலாக தீவிரவாத அமைப்புகள் ஆள் எடுப்பதை தடுக்கவும், ஆபாசமான உள்ளடக்கங்கள், நிதி மோசடிகள், வகுப்பு மோதல் மற்றும் வன்முறையை தடுக்கவும்  புதிய டிஜிட்டல் விதிகள் கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments