சென்னை பெருநகரில் கணிசமாக குறைந்த கொரோனா பாதிப்பு

0 3221

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,262ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தமாக 5லட்சத்து28ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அதில் 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்.

8 ஆயிரத்து 32 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் 6ஆயிரத்திற்கும் மேல் இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருப்போர் விகிதம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments