இந்தியா - துபாய் இடையே ஜூன் 23 முதல் பயணிகள் விமானம் இயக்கம் - எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு

0 2676
இந்தியா - துபாய் இடையே ஜூன் 23 முதல் பயணிகள் விமானம் இயக்கம் - எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு

துபாய்க்கும் இந்தியாவுக்கும் இடையே ஜூன் 23ஆம் தேதி முதல் விமானங்களை இயக்க உள்ளதாக எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா 2ஆவது அலையின் தாக்கத்தால் இந்தியா - துபாய் இடையே பயணிகள் விமானங்களை ஜூலை 6ஆம் தேதி வரை ரத்து செய்வதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தது.

இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், துபாயின் பேரிடர் மேலாண்மைக்கான குழு கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி விமானப் போக்குவரத்தைத் தொடங்கலாம் எனப் பரிந்துரைத்தது.

இதை ஏற்று இந்தியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து துபாய்க்கு ஜூன் 23 முதல் விமானங்களை இயக்குவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்குள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments