2 ஆம் வகை உள்ள 23 மாவட்டங்களில் என்ன தளர்வுகள்...எவைக்கு அனுமதி.!

0 7619
2 ஆம் வகை உள்ள 23 மாவட்டங்களில் என்ன தளர்வுகள்...எவைக்கு அனுமதி.!

ரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாகக் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகளும், காய்கறி, பழம் பூ விற்கும் நடைபாதைக் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், அடுமனைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு வழங்கும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

பிற மின் வணிகச் சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். இனிப்பு மற்றும் காரவகை விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம்.

அரசின் இன்றியமையாத் துறைகள் 100 விழுக்காடு பணியாளர்களுடனும், பிற அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்.

அனைத்துத் தனியார் நிறுவனங்கள், 33 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடனும், பிற தொழிற்சாலைகள் 33 விழுக்காடு பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மின் பொருட்கள் விற்பனைக் கடைகள், மிதிவண்டிகள் இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பகங்கள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிப்பாக விற்பனைக் கடைகள், வாகன விற்பனை நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் விற்பனைக் கடைகள், காலணி விற்பனைக் கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டுப் பயன்பாட்டு மின் பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்யக் காலை 6 முதல் மாலை 5 வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

செல்பேசி விற்பனைக் கடைகள், கட்டுமானப் பொருள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும் அனுமதிக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டுப் பயிற்சிக் குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

திரையரங்குகளில் வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
வாடகை வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்லலாம்.

வாடகைக் கார்களில், ஓட்டுநர் தவிர மூவரும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இருவரும் பயணிக்கலாம். வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments