கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரும் வழக்கு - மத்திய அரசு விளக்கம்

0 2642

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நான்கு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இழப்பீடு வழங்கக் கோரித் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், கொரோனா நிவாரணம் மற்றும் இறப்புச் சான்று வழங்குவதில் அரசின் கொள்கையைத் தெரிவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு மத்திய அரசு அளித்த அறிக்கையில், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி நிலநடுக்கம், வெள்ளம் ஆகியவற்றால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்க இடமுள்ளதாகவும், கொரோனாவுக்கு அது பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் மூன்று இலட்சத்து 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளதாலும், மருத்துவச் செலவு அதிகரிப்பு, குறைந்த வரி வருவாய் ஆகியவற்றால் நிதி நெருக்கடியில் உள்ளதாலும் மாநில அரசுகளால் இழப்பீடு வழங்க இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments