மே 4க்குப் பின் 27ஆவது முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

0 9319

மே நான்காம் நாளுக்குப் பின் 27ஆவது முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 58 காசுகளாகவும் உள்ளது.

மே நான்காம் நாளுக்குப் பின் இன்று வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் 82 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் 24 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களின் பல நகரங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 73 டாலர் 51 சென்ட்களாக உள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments