இலங்கையின் புதிய துறைமுகத் திட்டங்களில் சீனக் கடற்படைக்கு இடம் கிடைப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் -இந்திய கடற்படை அதிகாரி

0 2094

லங்கையில் புதிய துறைமுகத் திட்டங்களில் சீனக் கடற்படைக்கு இடம் கிடைப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று இந்திய கடற்படை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடற்படையின் துணை தளபதி ஜி.அசோக்குமார், சீனா அதிகளவில் முதலீடுகளை செய்து இலங்கையின் துறைமுகத் திட்டங்களில் பங்கு வகிப்பதும் ஒரு துறைமுகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அச்சுறுத்தலாகவே இருக்கும் என்றார்.

நாட்டின் கடலோர எல்லைகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ள இந்திய கடற்படை எந்த வித சவால்களையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அசோக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments