டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்ப்பு..!

0 4182

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு ஓவர் கூட போடாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது நாளில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. 34 ரன்கள் குவித்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கெய்ல் ஜேமிசன் பந்தில் டிம் சவுதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 28 ரன்களிலும், புஜாரா 8 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 64 புள்ளி 4 ஓவர்களை கடந்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ஆட்டம் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments