தெலுங்கானாவில் இன்று முதல் முழு அளவில் ஊரடங்கு ரத்து..! ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் உத்தரவு

0 3611
தெலுங்கானாவில் இன்று முதல் முழு அளவில் ஊரடங்கு ரத்து..! ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் உத்தரவு

தெலுங்கானாவில் இன்று முதல் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படுகிறது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் முழு அளவில் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து முழு அளவில் இயல்புவாழ்க்கை திரும்புவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்துத் துறைகளும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளை ஜூலை 1 ஆம் தேதி முதல் திறக்கவும் தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மக்கள் அலட்சியமாக இல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் தெலுங்கானா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments