7வது சர்வதேச யோகா தினத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

0 2824

7வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய யோகா நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் காலை 7 மணி முதல் 7.45 மணி வரை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு யோகாசன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேரலை வாயிலாக நடைபெற உள்ளது.

உடல் நலத்திற்கான யோகா என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 45 நிமிடங்களுக்கு யோகா டிரில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

யோகா குருக்களான பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் இணைகின்றனர். இது தவிர சுமார் ஆயிரம் நிறுவனங்களில் யோகா பயிற்சி அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments