தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

0 29833

மிழ்நாட்டில் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளை காலையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவிக்க உள்ளது. 50 சதவீத பயணிகளுடன் மாநகரப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 14ம் தேதி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. ஆட்டோ டாக்சிகள் சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படவும் டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டன. பழுதுபார்க்கும் கடைகள், மின்சாதனக் கடைகள் போன்றவற்றை திறக்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆயினும் பேருந்து போக்குவரத்து இல்லாததால் பெரும்பாலான நகரங்களில் இயல்பு வாழ்க்கை மீளவில்லை. இந்த வாரத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் புதிய தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் ,அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் மாநகரப் பேருந்துகளை இயக்கலாம் என்று அதிகாரிகள் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஜவுளிக்கடைகள், சிறிய வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதி அளிக்கப்படக்கூடும். நாளை முதல் என்ன என்ன தளர்வுகள் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்க உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதன் எதிரொலியாக ரயில் விமான சேவைகளும் படிப்படியாக சீரடைந்து வருகின்றன. எனினும் பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், மால்கள் போன்ற மக்கள் திரளாகக் கூடும் இடங்களுக்கு இம்மாத இறுதி வரை தடை நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments