ஆபாச ஓவியம் வரைந்தால் டபுள் மார்க்..! விடுதி மாணவிகள் தான் டார்கெட்; சிவசங்கரின் சித்து விளையாட்டுகள்...

0 7372

பாலியல் புகாருக்கு ஆளான சிவசங்கர் பாபா, மாணவிகளை ஆபாச ஓவியங்கள் வரையச் சொல்லி வற்புறுத்தியதோடு, ஓவியம் வரையும் மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் பயிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறிக் கொள்ளும் பாபா, எந்தவித பயமும் இல்லாமல் தனது இஸ்டம் போல் பதின்பருவ சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்தது விசாரணையில் அம்பலமாகி வருகிறது. அதற்கு பாபாவின் ரைட்டு, லெப்டுகளான பெண் சீடைகளும் உதவியதும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது புகாரளித்த மாணவிகளின் எழுத்துப்பூர்வ புகார்களில் வெளிவந்துள்ள தகவல் அதிர வைத்துள்ளது. மாணவிகளை அடிக்கடி ஆபாச ஓவியங்களை வரையச் சொல்லி வற்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்த டம்மி பாபா சிவசங்கரன், அதன் மூலம் பாலுணர்வை தூண்டி தனது காம லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளான் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்காக தனியாக நோட்டுப் புத்தகம் வாங்கி வரச்சொல்லி, ஆபாச படங்கள், அந்தரங்க உறுப்புகளை படமாக வரைய வைத்து காண்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்த டம்மி பாபா சிவசங்கரன், அவ்வாறு ஓவியம் வரையும் மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இதுபோன்று சிவசங்கர் பாபாவின் சொல்படி கேட்டு, பல மாணவிகள் தவறு என தெரியாமலேயே தவறான பாதைக்கு சென்றதாகவும், தன்னுடன் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஒரு நோட்டு முழுவதும் டம்மி பாபா சொன்னதுபோல் ஆபாசப் படங்களை வரைந்து வைத்திருந்ததாகவும், மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைக் கடவுளின் அவதாரம் எனக் கூறி கொண்டு மாயையை உருவாக்கி வலம் வந்த டம்மி பாபா சிவசங்கரின் மகுடிக்கு அங்குள்ள பெண் சீடைகளும் பெட்டிப் பாம்பாக செயல்பட்டு வந்துள்ளனர். பாபாவின் பாலியல் அத்துமீறல்கள் தவறு என பாதிக்கப்பட்ட மாணவிகள் சிந்திக்கக் கூட முடியாத அளவுக்கு மூளைச் சலவை செய்வதில், அந்த கொடூர மனம்படைத்த சிஷ்யைகள் குறியாக இருந்துள்ளனர்.

பிரச்சனைகள் வராமல் இருக்க தாய், தந்தையை விட்டுப் பிரிந்து விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை சூறையாடுவதை போலியின் உருவமான டம்மி பாபா சிவசங்கரன், வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

”பாபா வரச் சொன்னார்” என ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தால் அந்த மாணவி அவனுடைய சொகுசு அறைக்கு செல்ல வேண்டும் என விதி உள்ளதாம். இந்த விதியை விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. டம்மி பாபாவின் பித்தர்களாக வலம் வந்த பெண் சீடர்கள் மூலம் மாணவிகளை வரவழைத்து மதுபானங்கள் கொடுத்து சிவசங்கர் பாபா பாலியல் சீண்டலில் ஈடுபடுவான் எனக் கூறப்படுகிறது. தன்னுடன் பயின்ற இரண்டு மாணவிகள் சிவசங்கர் பாபாவுடன் இருந்ததை நேரில் பார்த்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் கூறியுள்ளது கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பாபாவின் பாசத்திற்குரிய இன்னும் பல பெண் சீடர்கள் எனக்கூறப்படும் சமூகத்திற்கு கேடான பீடைகள் கொத்தாக சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொல் வழக்கு டம்மி பாபா சிவசங்கரன் விஷயத்தில் உண்மையாகியுள்ளது.

காலம் போன காலத்தில் ஏற்பட்ட பாலியல் இச்சைக்காக, கடவுளின் பெயரைக் கூறி சிறு, சிறு பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருந்த டம்மி பாபா சிவசங்கரன், சட்டத்தின் எந்தவொரு ஓட்டையிலும் தப்பிவிடாமல் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments