தமிழ்நாட்டில் மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18,232 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 4451

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரம் என்ற அளவுக்கு சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும் 8 ஆயிரத்து 183 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆயிரத்து 14 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஈரோட்டில் மேலும் 933 பேரும்,திருப்பூரில் புதிதாக 489 பேரும் சென்னையில் மேலும் 468 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பலனளிக்கா மல் 21 வயது தூத்துக்குடி இளம்பெண் உள்பட ஒரேநாளில் 180 பேர் உயிரிழந்தனர். இவர்களில் சென்னையில் மட்டும் 31 பேர் பலியானார்கள்.

கோயம்புத்தூரில் 17 பேரும், திருவாருரில் 10 பேரும், திருச்சி மற்றும் திருப்பத்தூரில் தலா 9 பேரும் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 232 பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments