புதுச்சேரி பாஜக அலுவலகத்தை சூறையாடிய எம்எல்ஏ ஜான் குமார் ஆதரவாளர்கள்.. அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி ஆவேச போராட்டம்..!

0 5892

புதுச்சேரி காமராஜ் நகர் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கேட்டு, கட்சி அலுவலத்தை முற்றுகையிட்ட அவரது ஆதரவாளர்கள், அலுவலக ஷட்டரை உடைத்தும் முன்பக்க பேனரைக் கிழித்தும் சூறையாடினர்.

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜான்குமார் காமராஜ் தொகுதியிலும் அவரது மகன் நெல்லித்தோப்பு தொகுதியிலும் நின்று வெற்றிபெற்றனர். ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பாஜக மேலிடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், திடீரென வேறொருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதனையடுத்து சித்தானந்த நகரிலுள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜான்குமாரின் ஆதரவாளர்கள், சூறையாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments