காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொடூரமாக வெட்டிக் கொன்றவனை அடித்து துவைத்த மக்கள்

0 5784
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றவனை ஊர் மக்கள் சுற்றிவளைத்து அடித்து துவம்சம் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றவனை ஊர் மக்கள் சுற்றிவளைத்து அடித்து துவம்சம் செய்தனர்.

சிந்தலசெருவு என்ற கிராமத்தைச் சேர்ந்த சிரிஷா என்ற பெண், கல்லூரி 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சரண் என்பவன் சிரிஷாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததோடு, தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு அவ்வப்போது அவரிடம் தகராறு செய்து வந்துள்ளான்.

நேற்று ஒரு முடிவோடு அரிவாளுடன் சிரிஷாவைத் தேடிச் சென்ற சரண், தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளான். அதற்கு சிரிஷா மறுக்கவே, மறைத்துவைத்திருந்த அரிவாளைக் கொண்டு அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்ப முயன்றுள்ளான்.

இதனைப் பார்த்த மக்கள் சரணை சுற்றிவளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். குறிப்பாக இளம் பெண்கள் அவனை துவைத்து எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments