தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

0 4075
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், 2 நாட்களுக்கு சென்னை, நீலகிரி, கோவை, தேனி மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கேரள, கர்நாடகா கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும், அரபிக்கடலுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments