சாலை ஓரத்தில் காத்திருந்த ஆசிரியர்களிடம் காரை நிறுத்தி விசாரித்த முதலமைச்சர்

0 3049

சாலை ஓரத்தில் காத்திருந்த பணிநியமன ஆணை கிடைக்காத ஆசிரியர்களை கண்டதும்,. காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர், ஆசிரியர்கள் சிலர் கோரிக்கை மனுவுடன் காத்திருந்ததை பார்த்ததும், காரினை நிறுத்தி, அவர்களிடம் நலம் விசாரித்து, அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் என விசாரித்தார்.

2018-19ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான அவர்கள், தாங்கள் 1500 பேர் இரண்டாம் பட்டியலில்  காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேரில் சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் உறுதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments