தொற்று குறையாத இடங்களில் தளர்வுகள் வேண்டாம் .. அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை..!

0 9583
தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் - மருத்துவ நிபுணர் குழு

ரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தொற்று பாதிப்பு குறையாத மாவட்டங்களில் கூடுதல் அளிக்க வேண்டாம் என மருந்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. அதேசமயம், நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களை திறக்க அனுமதிக்கலாம் எனவும் அந்த குழு யோசனை கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை முடிவடைகிறது. ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் ஏற்கனவே கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கபட்டிருந்தன. தற்போது பெரும்பாலான மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால், 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? அல்லது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை அமல்படுத்தலாமா? உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படவுள்ள ஊரடங்கில், மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிறிய நகை மற்றும் ஜவுளிக் கடைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படும் எனவும், கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், வீட்டுக்கு அருகேயுள்ள சிறு, சிறு கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, நோய் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வு அளிக்க வேண்டாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கலாமென மருத்துவக் குழு யோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வணிகர்களுக்கு தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கவும் முதலமைச்சருடனான ஆலோசனையில் மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments