மேகதாது விவகாரம்- கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

0 2637
மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளதற்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளதற்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், மேகதாது அணை கட்டும் திட்டத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என்றும், கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரித் தான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமருக்குக் கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களிடையான ஆற்றுநீர்த் தகராறு சட்டப்படி நீரைத் தடுப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்துக்கும் உரிமை கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற ஆணையை மீறி அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெறவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments