ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற இடத்தை பிடித்த 4 வாரங்களுக்குள் அந்த இடத்தை இழந்தார் கவுதம் அதானி

0 7697
ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்த 4 வாரங்களுக்குள், சொத்து மதிப்பு குறைந்ததால், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 3 ஆம் இடத்திற்கு சென்றுள்ளார்.

ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்த 4 வாரங்களுக்குள், சொத்து மதிப்பு குறைந்ததால், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 3 ஆம் இடத்திற்கு சென்றுள்ளார்.

அதானி குழுமத்தின் 4  நிறுவனங்களின் பங்குகளை வாங்கியிருந்த 3 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை முறையாக வழங்கவில்லை என்பதால் அந்த நிறுவன கணக்குகளை தேசிய பத்திர வைப்பு நிறுவனம் கடந்த 31 ஆம் தேதி முடக்கியது.

இதனால் அதானியின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து, கவுதம் அதானிக்கு 4 நாட்களுக்குள் சுமார் 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

அவரது நிகர சொத்து மதிப்பும் 5.60 லட்சம் கோடியில் இருந்து 4.63 லட்சம் கோடியாக குறைந்தது. இதனால், 5 லட்சம் கோடிக்கும் அதிகமான  சொத்துமதிப்புடன் சீனாவின்  Zhong Shanshan  தாம் இழந்த 2 ஆம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments