இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்து 753 ஆகக் குறைவு

0 2782
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்து 753 ஆகக் குறைவு

இந்தியாவில் ஒருநாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 753 ஆகக் குறைந்துள்ளது.

நேற்று 19 லட்சத்து 3009 மாதிரிகள் சோதனை செய்ததில் 60 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது தெரியவந்துள்ளது.  97 ஆயிரத்து 743 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரத்து 647 ஆகக் குறைந்துள்ளது. 

காலை எட்டரை மணி நிலவரப்படி இந்தியாவில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 19 ஆகும். மகாராஷ்டிரத்தில் ஒரு லட்சத்து 37ஆயிரத்து 851 பேரும், கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 72 பேரும் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர்.

கேரளத்தில் ஒரு லட்சத்து எட்டாயிரத்து 117 பேரும், தமிழ்நாட்டில் 89 ஆயிரம் பேரும் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் நேற்று மாலை வரை 27 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments