சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் ஆசிரியை தீபா தலைமறைவு

0 2859
சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் ஆசிரியை தீபா தலைமறைவு

பாலியல் புகாரில் சிக்கி சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை தீபா தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கைது செய்யப்பட்டார். இதில், அங்குள்ள ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்து, விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவுக்காக மாணவிகளை மூளைச் சலவை செய்வதில் முக்கிய நபராக இருந்த அவரது நீண்ட கால பக்தையான சுஷ்மிதா என்ற பெண்ணை கைது செய்தனர்.

இதனிடையே, பாலியல் அத்துமீறல்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆசிரியைகள் தீபா, பாரதி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பாரதி வெளிநாட்டில் உள்ள நிலையில், தீபா தலைமறைவானதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments