இந்தியாவின் தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்

0 2643
இந்தியாவின் தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் நேற்று காலமானார்.

அவருக்கு வயது 91. பறக்கும் சீக்கியர் எனப் பெயர் பெற்ற மில்கா சிங் கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த அவர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கவனிக்கப்பட்டு வந்த மில்கா சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம் என பிரதமர் ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

மில்கா சிங் 5 முறை ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற அவர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments