லண்டனில் சரக்கு விமானத்தின் லேண்டிங் கியரை பொறியாளர் சரியாக லாக் செய்யாததால் விபத்து

0 3318
லண்டனில் சரக்கு விமானத்தின் லேண்டிங் கியரை பொறியாளர் சரியாக லாக் செய்யாததால் விபத்து

இங்கிலாந்தில், விமானத்தின் லேண்டிங் கியர் சரியாக லாக் செய்யாததால் விபத்து நேரிட்டது.

தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ட்ரீம்லைனர் 787 ரக சரக்கு விமானம் நின்று கொண்டிருந்தது.

அப்போது முன் சக்கரத்தின் லேண்டிங் கியரை பொறியாளர் சரியாக லாக் செய்யாமல் விட்டதால் விமானத்தின் மூக்குப் பகுதி தரையில் மோதியது.

அதே நேரத்தில் விமானத்துடன் இணைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் இடித்ததில் வாசல் பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் விமான ஊழியர்கள் இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments