கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா..? யோகக்கார 90 கிட்ஸ்..! இரு காதலிகளுடன் டும்...டும்..!

0 5414
கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா..? யோகக்கார 90 கிட்ஸ்..! இரு காதலிகளுடன் டும்...டும்..!

ஒரே நேரத்தில் இரு மாமன் மகள்களையும் காதலித்து வந்த இளைஞர் ஒருவர், அவர்களை ஏமாற்ற விரும்பாமல் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார்.

35 வயதை தாண்டியும் ... பெண் கிடைக்காமல் ... ஒரு திருமணத்துகே வழியில்லாமல் பலர் மேட்ரிமோனியல் இணையதளங்களில் தவம் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் மாமன் மகள்கள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட, 90 களின் பிற்பகுதியில் பிறந்த அதிர்ஷ்டகார அர்ஜூன் இவர்தான்..!

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் மண்டலம் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன்.

ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருந்த அர்ஜுன், செல்போன்மூலம் அத்தை மகள்களான சுரேகா மற்றும் கனகா உஷாரானி ஆகிய இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து பொழுதை கழித்துள்ளார்.

உஷாராணி கான்பூர் கிராமத்திலும், சுரேகா ஷம்புகுடா கிராமத்திலும் வசித்து வந்த நிலையில் இருவரையும் கடந்த மூன்று ஆண்டுகளாக செல்போன் மூலமாகவும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் இரு பெண்களின் வீட்டுக்கும் தெரியவர, இருவரில் எந்த மாமன் மகளை திருமணம் செய்யபோகிறாய் என்று உறவினர்கள் கடைக்குட்டி சிங்கம் கார்த்திக்கு ஏற்படுத்திய சிக்கலை உருவாக்கினர்.

வருங்கால ஆசிரியரான அர்ஜூனோ காதலித்த இரு காதலிகளிடமும் சாமர்த்தியமாக பேசி சம்மதிக்கவைத்து அவர்கள் விருப்பதின் பேரில் இருவரையுமே திருமணம் செய்து கொள்வதாக கூறி எல்லோரையும் அதிரவைத்தார்.

அவர்கள் சாதி வழக்கப்படி இருதார மணம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற நிலையில் இரண்டு பெண்களும் தாங்கள் அர்ஜுன் மாமாவை தான் திருமணம் செய்வோம் என ஒற்றை காலில் நின்றதால் வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் நிலை உருவானது.

கிராமத்து பெரியவர்களும் அழைத்து பேசியதால் திருமணத்திற்கு இரு பெண்வீட்டாரும் சம்மதித்தனர். இதையடுத்து கான்பூர் கிராமத்தில் ஒரே மணபந்தலில் அதிவாசிகள் சம்பிரதாயம் படி இரண்டு மணப் பெண்களின் கழுத்தில் தாலி கட்டி பெரியவர்கள் முன்னிலையில் இருவரையும் மனைவியாக்கிக் கொண்டார் புதுமாப்பிள்ளை அர்ஜூன்..!

ஆதிவாசிகள் வரலாற்றில் ஒரு பழங்குடியின ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது இதுவே முதல் முறை என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்களே நல்ல வேலை இருந்தும், திருமணவாழ்க்கையை சவால்களுடன் கடக்கும் நிலையில், கிடைத்தவரை யோகம் என்று காதலித்த 2 பேரையுமே திருமணம் செய்து கொண்டுள்ள அர்ஜூன் வாழ்க்கையில் இனி அடைமழை தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments