தமிழகம் வலுவான எதிர்ப்பு..! மேகதாது திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

0 3113

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்ட அறிவிப்புக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முடிவு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிரானது என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தாம் வலியுறுத்தி இருந்ததாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் தன்னிச்சையான அறிவிப்பு இருமாநில நல்லுறவிற்கு உகந்தது அல்ல என்றும் சுட்டிக்காட்டி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments