தற்காலிகமாக நிறுத்தப்பட்ட 20 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கம்..! -தெற்கு ரயில்வே அறிவிப்பு

0 3232

போதிய பயணியர் வருகை இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட 20 சிறப்பு ரயில்களை ஜூன் 20, 21 ஆகிய நாட்களில் இருந்து மீண்டும் இயக்க உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் ரயில், தென்காசி, செங்கோட்டை வழியே சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள், கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையிலான இரவு நேர விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான விரைவு ரயில்கள் ஆகியன இதில் அடங்கும்.

புனலூர் - மதுரை விரைவு ரயில், சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில் ஆகியனவும் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments