தமிழ்நாட்டில் மேலும் 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு; 19,860 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3799
தமிழ்நாட்டில் மேலும் 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு; 19,860 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

மிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு 3 இலக்கம் அல்லது 2 இலக்கத்திற்கு கீழாக சரிந்து விட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் மேலும் 8 ஆயிரத்து 633 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆயிரத்து 89 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள், ஈரோட்டில் மேலும் 964 பேரும், சென்னையில் புதிதாக 492 பேரும், திருப்பூரில் 481பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 19 ஆயிரத்து 860 பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனளிக்காமல் 15 வயது கோவை சிறுவன், 21 வயது கரூர் இளம்பெண் உள்பட 287 பேர், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.

கொரோனாவுக்கு . தமிழ்நாடு முழுவதும் 89 ஆயிரத்து 9 பேர், சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments