ஊரடங்கில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் மகளுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

0 3218
ஊரடங்கில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் மகளுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

ரடங்கின் போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனுக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மகள் ப்ரீத்திக்கு மட்டும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவர்களின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால், உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தவறு செய்யக் கூடிய வழக்கறிஞர் மீது பார்கவுன்சில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டுவரவேண்டும் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.

இந்த முன் ஜாமீன் வழக்கு தொடர்பாக வாட்ஸ் அப்பில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments