தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு... ஒரு மாதத்திற்குள் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு - நீதிபதி முருகேசன்

0 1981
தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

தொழிற் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட குழுவின் முதல் கூட்டம் செண்னை கிண்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய,குழுவின் தலைவர், தனி ஒதுக்கீடுகொடுத்தால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களின் சமூக - பொருளாதாரம் முன்னேறும் என்று தெரிவித்தார்.

ஆய்வுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments