நோவாவாக்ஸ் தடுப்பு மருந்தைக் குழந்தைகளுக்குச் செலுத்தி சோதிக்கத் திட்டம் :சீரம் நிறுவனம் அறிவிப்பு

0 2041

புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் நோவாவாக்ஸ் என்கிற கொரோனா தடுப்பு மருந்தைக் குழந்தைகளுக்குச் செலுத்தும் சோதனை ஜூலையில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தை 12 முதல் 18 வயதுவரை உள்ளோருக்குச் செலுத்தும் சோதனையை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. 6 முதல் 12 வயது வரை உள்ளோருக்கும், 2 முதல் 6 வயது வரையுள்ளோருக்கும் தடுப்பு மருந்து செலுத்தும் சோதனையை நடத்த உள்ளது.

சிறார்களுக்கு மூக்கின் வழியாகத் தடுப்பு மருந்து செலுத்தும் சோதனையையும் நடத்தி வருகிறது. இதேபோல் சைடஸ் கடிலா நிறுவனமும் சைகோவ் டி எனப்படும் மருந்தை 12 முதல் 18 வயது வரையுள்ள பிரிவினருக்குச் செலுத்திச் சோதித்துள்ளது. 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்குச் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments