2024ஆம் ஆண்டுக்குள் சாலைகளின் தரம், பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

0 2747
2024ஆம் ஆண்டுக்குள் சாலைகளின் தரம், பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

சாலைகளின் தரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தி அடுத்த மூன்றாண்டுகளில் சாலை விபத்துக்களை ஐம்பது விழுக்காடு குறைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொழில்கூட்டமைப்பின் கருத்தரங்கில் காணொலியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நேர்வதாகவும், இவற்றில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், ஒருநாளில் மட்டும் நானூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.

50 விழுக்காடு விபத்துக்கள் சாலைப் பொறியியல் குறைபாடுகளாலேயே நேர்வதாகவும், அதிக விபத்துக்கள் நேரும் பகுதிகளை அடையாளம் கண்டு குறைபாடுகளைச் சரிசெய்ய அரசு செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 22 இலட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளதால், அதைப் போக்குவதற்காக இரண்டாயிரம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை அமைக்க உள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments