சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டம்..?

0 2687
பள்ளிச்சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ள்ளிச்சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக சிவசங்கர் பாபா சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments