மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்களை அழைத்துவர உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல்

0 2121
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்களை அழைத்துவர உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல்

ண்பார்வை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மதுரை மீனாட்சி கோயிலில் அமைச்சர்கள் சேகர் பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை மீண்டும் தேனியில் இருந்து மதுரைக்கு பணி மாறுதல் செய்ய உள்ளோம் என்றார்.

கோயில் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் திமுக பிரமுகர்கள் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments