காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

0 4072
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார்.

2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேற்றிரவு தங்கிய மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், இன்று காலை டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு, சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற நிலையில், கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments