நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 2124
நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

டக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.

அஸ்ஸாமில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கிமின் பகுதியில் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் Pema Khandu உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தவிர 11 இதர சாலைகளையும் அவர் இந்நிகழ்ச்சியில் திறந்துவைத்தார். இந்த சாலைகள் ராணுவ வீரர்களுக்குத் தேவையான தளவாடங்கள், உணவு, மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இந்தியா பாதுகாப்புத் துறையின் உற்பத்தி மையமாக மாறி வருவதாகவும் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments