பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 2223
பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து பத்தாயிரத்து 178 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரளத்திலும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் பவானி ஆற்றின் மீதுள்ள பில்லூர் அணை நிரம்பியுள்ளது.

அங்கிருந்து ஆற்றில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி பத்தாயிரத்து 178 கனஅடி நீர்வந்துகொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் 91 அடியாகவும், நீர்இருப்பு 22.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments