நாட்டில் ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 587 ஆக குறைவு..

0 3288
நாட்டில், ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 587 ஆகக் குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில், ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 587 ஆகக் குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

88 ஆயிரத்து 977 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, 73 நாட்களில் இல்லாத அளவுக்கு  8 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாமிடத்திலும், கேரளா மூன்றாமிடத்திலும் உள்ளன.

முதலிடத்திலும் பின்னர் இரண்டாமிடத்திலும் இருந்த தமிழகம் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. தடுப்பூசி போடப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 கோடியே 89 லட்சமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments